| ஒரு அறிஞர் சொல்கிறார். |
| அவசரப்படாதே! பயப்படாதே! |
| நீ விதைத்து விட்டாய். இனி, நிழலில் அமர்ந்து என்ன நடக்கிறதென்று பார்த்திரு. |
| விதை தளிரும். பின் முளைத்துவிடும். அதை விரைவுபடுத்த உன்னால் முடியாது. |
| எல்லா பாதைகளும் ஒரு முடிவிடத்தை நோக்கியே செல்கின்றன. |
| அதைப் புரிந்து கொள்ளுதல்தான் பயனளிக்கும். |
| அதற்காக ஏற்படும் கால தாமதம் தவிர்க்க முடியாதது. |
| அதனால் பொறுத்திரு. |